தமிழ்நாடு

tamil nadu

மொத அமெரிக்கா இப்ப ஹைதராபாத் - தனுஷ் செம பிஸி

By

Published : Jul 1, 2021, 6:20 PM IST

'D43' படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

தனுஷ்
தனுஷ்

நடிகர் தனுஷ் 'தி க்ரே மேன்' படப்பிடிப்புக்காக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருந்தார். படப்பிடிப்பு முடிந்த போதிலும், கரோனா ஊரடங்கு காரணமாகஅவர் சென்னை திரும்பாமல், குடும்பத்துடன் அங்கேயே இருந்தார்.

நேற்று (ஜூன் 30) சென்னை திரும்பிய தனுஷ், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தனது 43ஆவது படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று (ஜூலை 1) சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

கார்த்திக் நரேன் இயக்கிவரும் இப்படத்தில், மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துவருகிறார்.

D43 போஸ்டர்

தற்காலிகமாக கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'D43' படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தளபதிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் தனுஷின் மாஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details