தமிழ்நாடு

tamil nadu

கொரோனா வைரஸ் பீதி - இந்திய வருகையை ரத்து செய்த ஹாலிவுட் நடிகர்

By

Published : Mar 9, 2020, 6:39 PM IST

'எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியா வரவிருந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பயண ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Chris Hemsworth calls off India visit
Hollywood actor Chris Hemsworth

டெல்லி: கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக தனது இந்திய வருகையை ரத்து செய்துள்ளார் 'அவெஞ்சர்ஸ்' தொடர் படங்களில் தோர் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.

ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்துள்ள 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்ற படம் டிஜிட்டல் தளமான நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. மார்ச் 16ஆம் தேதி மும்பையில் நடைபெற இருந்த இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் சாம் ஹர்கிரேவுடன், ஹெம்ஸ்வொர்த்தும் இந்தியா வருவதாக இருந்தது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் தற்போதையை சூழ்நிலையில் இந்தியப் பயணம் குறித்த ஆபத்துகளை பயண ஆலோசனைக் குழுவினர் தெரிவித்த நிலையில், ஹெம்ஸ்வொர்த் தனது பயணத்தை ரத்து செய்தார்.

ஆக்‌ஷன் - திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ரண்தீப் ஹூடா, பங்கர் திரிபாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது .

முன்னதாக, 'தாக்கா' என்ற இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்பதற்காக இந்திய வந்திருந்தார், ஹெம்ஸ்வொர்த்.

இந்தியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுபவம் குறித்த ஹெம்ஸ்வொர்த் கூறியதாவது:

'இங்குள்ள மக்களையும், இடங்களையும் மிகவும் நேசிக்கிறேன். படப்பிடிப்பு நடைபெற்ற தெருக்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். ஒவ்வொரு டேக்குக்குப் பிறகும் இயக்குநர் கட் சொன்னால், படப்பிடிப்பைப் பார்க்க கூடியிருந்தவர்கள் சத்தமாக குரல் எழுப்பி உற்சாகம் அளித்தனர். இதைப் பார்க்கையில் பெரிய மைதானத்தில் பெர்ஃபார்ம் செய்யும் ராக் ஸ்டாரைப் போல் உணர்ந்தோம்.

நாங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் படப்பிடிப்பு என்ற பெயரில் சீர்குலைத்தபோதும், எங்களுக்கு வழங்கிய ஆதரவைும், அரவணைப்பும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அனைவரும் எங்களுக்கு நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தினர்' என்று கூறினார்.

உலக அளவில் சூப்பர்ஹிட்டான அவெஞ்சர்ஸ் தொடர் படங்களில் 'தோர்' என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் தோன்றி, புகழ் பெற்றவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு முன்னரே மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் 'தோர்' என்ற சூப்பர் ஹீரோ படத்தில் தோன்றினார்.

'தோர்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும், அவெஞ்சர் தொடர் படங்களிலும் தொடர்ந்து அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹெம்ஸ்வொர்த்.

தையும் படிங்க:

த பேட்மேனும் பேட்மேன் வாகனமும் - வெளியான ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details