தமிழ்நாடு

tamil nadu

ரஜினியின் மூத்த மகளுக்கு கரோனா தொற்று உறுதி!

By

Published : Feb 1, 2022, 11:03 PM IST

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/01-February-2022/14345627_aish.jpeg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/01-February-2022/14345627_aish.jpeg

தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

இருப்பினும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷின் பெயரை நீக்காமலேயே வைத்திருக்கிறார், ஐஸ்வர்யா.

இருவரையும் மீண்டும் இணைத்து வைக்கப்பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பதிவு

அதில், "அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள். 2022ஆம் ஆண்டு இன்னும் என்னவெல்லாம் எனக்காக பட்டியலில் தேக்கி வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details