தமிழ்நாடு

tamil nadu

மிர்ச்சி சிவாவின் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'!

By

Published : Sep 20, 2021, 12:43 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகர் மிர்ச்சி சிவா, ’சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்னும் ஃபேண்டசி காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

siva
siva

நகைச்சுவை நடிகர் மிர்ச்சி சிவா, அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் இப்படத்தில், மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடிகைகள் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

மேலும் இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா.கா.பா.ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆர்தர். ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று (செப்.20) சென்னையில், பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: மிர்ச்சி சிவா - யோகிபாபு கூட்டணியில் காசேதான் கடவுளடா!

ABOUT THE AUTHOR

...view details