தமிழ்நாடு

tamil nadu

அஜித் பட ரீமேக்கில் சிரஞ்சீவி

By

Published : Aug 31, 2021, 12:17 PM IST

ஹைதராபாத்: வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித்தின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டம். படமும் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும், ராம் சரணே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details