தமிழ்நாடு

tamil nadu

'காதுகொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்' - வளைகாப்பால் களைகட்டிய ரியோவின் இல்லம்

By

Published : Nov 24, 2019, 9:14 AM IST

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் ரியோ ராஜ், வீட்டில் அவரது மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தது. இதில் முக்கிய நடிகர் ஒருவர் வளைகாப்புக்கு விருந்தினராக வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

baby shower function in actor rio raj house

நடிகரும் முன்னணி ஆங்கருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார் ரியோ. திரைத்துறையில் தற்போது இவர் ஆர்வம் காட்டிவரும் நிலையில் ஸ்ருதி கர்ப்பமான செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது அவருக்குச் சிறப்பாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் பிரபல சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலரும் கலந்துகொண்டு ரியோ தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, காதல் தம்பதிகளுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். மேலும் வளைகாப்பு நாயகிக்கு வளையலையும் பரிசளித்துள்ளார்.

தற்போது, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் ரியோ நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: கவனத்தை ஈர்க்காத கோலிவுட்டின் மாற்று சினிமா 'இரண்டாம் உலகம்'! #6yearsofIrandamUlagam

baby shower function in actor rio raj house


Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details