தமிழ்நாடு

tamil nadu

இறுதிக்கட்ட பணியில் அருண்விஜய்யின் சினம் திரைப்படம்!

By

Published : Aug 16, 2020, 6:08 PM IST

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சினம்
சினம்

ஜி.என்.ஆர்.குமார் வேலன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சினம்'. மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக, பல்லக் லால் வாணி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடகஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "இப்படத்திற்கான டப்பிங் பணிகளை முழுவதுமாக நடிகர் அருண் விஜய் முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் முடிந்தவுடனே பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் தொடங்கவுள்ளோம். அரசு அறிவித்தபடி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பணி நடந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரில் அருண் விஜய்யின் ‘ஆங்கார தோற்றம்’ ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது. காவல் ஆய்வாளர் பாரி வெங்கட் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. த்ரில்லர் பாணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details