தமிழ்நாடு

tamil nadu

’அரண்மனை 3’ ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

By

Published : Sep 29, 2021, 6:29 PM IST

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தின் ட்ரெய்லர் நாளை (செப். 30) வெளியாகிறது.

aranamani
aranamani

சென்னை: ஆர்யா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ள அரண்மனை மூன்றாம் பாகம் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த இரு படங்களும் திகில், நகைச்சுவை கலந்து அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக அமைந்திருந்தது.

இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர் சி, அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் காமெடியனாக நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோ பாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'அரண்மனை 3' என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படம் முந்தைய இரண்டு பாகங்களைவிட மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார். இசை - சி. சத்யா.

இதைத் தொடர்ந்து 'அரண்மனை 3' வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தை வரும் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே, 'அரண்மனை 3' படத்தின் பாடல்களும், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டன. இந்நிலையில், நாளை (செப். 30) 'அரண்மனை 3' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ’அரண்மனை 3’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details