தமிழ்நாடு

tamil nadu

டைம் டிராவல் செய்து குழந்தையாக மாறிய அஞ்சலி வெளியிட்ட ஜாலி விடியோ

By

Published : Nov 14, 2019, 11:36 AM IST

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைப் பருவத்துக்கு திரும்ப நினைத்து வேடிக்கையான விடியோ ஒன்றை வெளியிட்டு, இந்தச் சிறப்பான நாளுக்கான தத்துவத்தையும் உதிர்த்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலி

சென்னை: குழந்தையாக மாறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும்விதமாக விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி.

பிஸியான ஷுட்டிங் வேலைகளுக்கு மத்தியிலும் புதுமையான புகைப்படங்கள், விடியோக்கள் மூலம் தனது ரசிகர்களை தவறாமல் குஷிப்படுத்திவருகிறார் அஞ்சலி.

இதையடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடுப்படும் நிலையில், தற்போது ஸ்பெஷல் விடியோ ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், குழந்தைத் தோற்றத்துக்கு முகத்தை மாற்றும் செயலி மூலம் தனது சிறு வயது தோற்றத்துக்கு மாறி, குழந்தைத்தனமான சிரிப்பு, எக்‌ஷ்பிரஷனுடன் குறும்பு விடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை உயிர்பித்துக்கொள்ளுங்கள் #HappyChildrensDay #ThrowbackThursday #ChildrensDay2019 என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், குழந்தையாக மாற நினைத்துள்ள அஞ்சலி, மொபைல் செயலியின் உதவியுடன் டைம் டிராவல் செய்து குழந்தையாக குறும்பு செய்து ஜாலி விடியோவை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details