தமிழ்நாடு

tamil nadu

புனித யாத்திரை, ஃபாரின் டூர்... - மன அழுத்தத்தைப் போக்க பயணம் மேற்கொள்ளும் சமந்தா!

By

Published : Oct 27, 2021, 10:42 PM IST

திருமண வாழ்விலிருந்து வெளியேறிய சமந்தா தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நான்கு புனித ஸ்தலங்களுக்கு பயணித்ததைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார்.

Samantha
Samantha

தன் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவைப் பிரிவதாக சமந்தா அறிவித்தது முதல் சமூக வலைதளங்களில் சமந்தா குறித்த விவாதங்களும், கலவையான விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன.

முன்னதாக தன் திருமண வாழ்வு குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த சமந்தா, தன் தனிப்பட்ட வாழ்வில் யாரும் தலையிட வேண்டாம் எனக்கூறி கடிதம் ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். எனினும், தன் தனிப்பட்ட திருமண வாழ்வு, பிரச்னைகளை தாண்டி மற்றொருபுறம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

Samantha

முன்னதாக ’சார் தம்’ எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு சமந்தா யாத்திரை சென்றிருந்தார். மன அழுத்தத்தைப் போக்கும் விதமான சமந்தாவின் இந்த பக்தி யாத்திரை குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாது.

Samantha

இந்நிலையில், வெகு நாள்களுக்குப் பிறகு தன் உதவியாளர்களுடன் சமந்தா பகிர்ந்துள்ள மகிழ்ச்சியான புகைப்படம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

திருமண வாழ்விலிருந்து வெளியேறிய சமந்தா,தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தன் மேக் அப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங், ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜுகல்கர் ப்ரீத்தம் ஆகிய இருவருடனும் தான் டூர் செல்லத் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டுக்கு செல்வதாகக் கூறி சமந்தா இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக சமந்தா கடும் விமர்சனங்களை சந்தித்தபோது அவரது உதவியாளர்கள் சாதனா சிங், ஜுகல்கர் ப்ரீத்தம் இருவரும் அவருக்கு பெரும் உறுதுணையாய் விளங்கினர்.

சமந்தா தற்போது தெலுங்கில் ’சாகுந்தலம்’, தமிழில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தந்தை...மகன்கள்...வைரலாகும் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details