தமிழ்நாடு

tamil nadu

சீனுராமசாமி - ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் இணைந்த 'மாமனிதன்' நடிகை!

By

Published : Jul 30, 2021, 3:13 PM IST

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காயத்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.

seenu ramasamy
seenu ramasamy

'கூடல்நகர்' மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 'இடம்பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகியவை வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் இவர் தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தில் நாயகியாக நடிகை காயத்திரி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 'எனது பாடல் விருதை வென்றது' - ஜி.வி. பிரகாஷ்

ABOUT THE AUTHOR

...view details