தமிழ்நாடு

tamil nadu

சிவசங்கர் மாஸ்டருக்கு சிறப்பான சிகிச்சை - நடிகர் விஷ்ணு மஞ்சு

By

Published : Nov 26, 2021, 6:10 PM IST

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.

vishnu manchu
vishnu manchu

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனமாடியுள்ளவர் சிவசங்கர். இவர் 'மகதீரா', 'திருடா திருடி' உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகவும், ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இவருக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

இவரின் மருத்துவச் செலவுக்கு அதிகப் பணம் தேவைப்படுவதால், திரையுலகப் பிரபலங்கள் உதவுமாறு அவரது மகன் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சோனு சூட் சிவசங்கரின் சிகிச்சைக்கான உதவியை செய்ய முன்வந்துள்ளார். இந்நிலையில், நடிகரும் தெலுங்கு நடிகர்கள் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு சிவசங்கரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், " சிவசங்கர் மாஸ்டர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசினேன். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதாக உறுதி கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிவசங்கர் மாஸ்டரின் மகன் அஜய்யும் என்னிடம் தெரிவித்துள்ளார். இப்போது அவருக்கு தேவை நமது எல்லோரின் வேண்டுதல் தான்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details