தமிழ்நாடு

tamil nadu

சூர்யா சரியாதான் பேசுனாரு - கே.எஸ். ரவிக்குமார்

By

Published : Jul 21, 2019, 2:06 PM IST

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது சரிதான் என்றும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இது பற்றி பேசுவேன் என்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

K.S.Ravikumar

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டிற்கான தலைவர், இரண்டு துணைத் தலைவர், நான்கு இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலின் அலுவலராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் காலை ஏழு மணிக்கு தொடங்கியது.

இதில் தகுதியுள்ள இரண்டாயிரத்து 45 பேர் வாக்களிக்க உள்ளனர். தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிடுகின்றனர். இரண்டாவது தலைவர் பதவிக்கான தேர்தலில் கே.எஸ். ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் ஆகியோரும், நான்கு இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர் சி உள்ளிட்ட 6 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்காக மனோபாலா, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 30 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நான்கு மணிக்கு முடிவடைந்த பின் ஐந்து மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

தேர்தலில் வாக்களித்த பின் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், "புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா சரியாக பேசியுள்ளார். நல்ல கருத்துகளைதான் பேசியுள்ளார். அவருடைய முழு பேச்சையும் நான் கேட்டேன், அகரம் கல்வி அறக்கட்டளை நடத்திவருவதால் கல்விக் கொள்கை குறித்து தகவல்கள் அவருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.

வாய்ப்பு கிடைத்ததால் அவர் பேசினார். எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்களும் அது குறித்து பேசுவோம். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகுதான் எங்களுக்கே அது குறித்து தெரிகிறது" என்று கூறினார்.

Intro:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறதுBody:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டிற்கான சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் இன்று மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதன் தேர்தல் அலுவலராக இருந்து இந்த தேர்தலை நடத்தி வருகிறார்

தலைவர் பதவிக்கு இயக்குனர் ஆர் கே செல்வமணி யும், இயக்குனர் வித்யாசாகரும் போட்டியிடுகின்றனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி உதயகுமாரும், பொருளாளர் பதவிகளுக்கு இயக்குனர் பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள தலைவர், இரண்டு துணை தலைவர், நான்கு இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர் ஆகுய பொறுப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது

தேர்தல் 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

2045 பேர் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்கள்.

செயாலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தலைவர் பதவிக்கு ஆர் கே செல்வமணி,
வித்யாசாகர் போட்டியிடுகின்றனர்.

2 து தலைவர் பதவிக்கான தேர்தலில் கே எஸ் ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் போட்டி.

4 இணை செயலாளர் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர் சி உள்ளிட்ட 6 பேர் போட்டி.

12 செயற்குழு உறுப்பினர் பதவிக்காக மனோபாலா, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 30 பேர் போட்டி.

காலை 7 மணி முதல் 4 மணி வரை தேர்தல்.

5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலில் வாக்களித்து விட்டு அவர்களிடம் பேசிய ks ravikumar

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா சரியாக பேசியுள்ளார்,
நல்ல கருத்துக்களை தான் பேசியுள்ளார்.

அவருடைய முழு பேச்சையும் நான் கேட்டேன்,அகரம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருவதால் கல்வி கொள்கை குறித்து தகவல்கள் அவருக்கு தெரிய வாய்ப்பிருக்குறது

அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவர் பேசினார்
எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்களும் அது குறித்து பேசுவோம்




Conclusion:புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே அது குறித்து தெரிகிறது என்று பேசினார்

ABOUT THE AUTHOR

...view details