தமிழ்நாடு

tamil nadu

கடந்த கால நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகர் சிவக்குமார்

By

Published : Jun 12, 2020, 4:51 PM IST

சென்னை: குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த பொன்னான நாட்கள் என்று தனது கடந்த கால நிகழ்வை நடிகர் சிவகுமார் நினைவுகூர்ந்துள்ளார்.

நடிகர் சிவகுமார்
சிவகுமார்

நடிகர் சிவகுமார் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு ஓவியராக இருந்த காலத்தில், 1958 முதல் 1965 வரை புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 15 ரூபாய் வாடகையில் சுமார் ஏழு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.

அந்த வீட்டை சமீபத்தில் பார்வையிட்ட நடிகர் சிவகுமார், பழைய ஞாபகங்களை நினைவுகூர்ந்தார்...

இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான் எனது அத்தனை ஓவியங்களும். ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம் என மொத்தம் 7 வருடங்கள் இந்த வீட்டில் நான் வாழ்ந்தேன்.

இங்கு இருக்கும் பொழுதுதான் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றித் திரிந்து ஓவியம் தீட்டினேன். அக்காலத்தில் அதற்கு மொத்தமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் செலவானது. குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த பொன்னான நாட்கள் அவை என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details