தமிழ்நாடு

tamil nadu

சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்

By

Published : Dec 11, 2021, 5:27 PM IST

Updated : Dec 11, 2021, 7:05 PM IST

நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சிம்பு மருத்துவமனையில் அனுமதி?; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
சிம்பு மருத்துவமனையில் அனுமதி?; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

சென்னை:தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படத்தில் சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

டைம் லூப்பை கான்செப்ட் என்பதாலும் கதைக்கு தேவைப்பட்டதாலும் தனது உடல் எடையை வெகுவாக குறைத்திருந்தார். இவரது முந்தைய படங்கள் பல கலவையான விமர்னங்கள் பெற்றிருந்த நிலையில், மாநாடு படம் மூலம் மாஸ் ஹிட் கொடுத்து தனது இமெஜை தக்க வைத்துள்ளார்.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில், இன்று அவர் காய்ச்சல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதையும் படிங்க:டிசம்பர் மாதம் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்கள்!

Last Updated : Dec 11, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details