தமிழ்நாடு

tamil nadu

கார் பந்தயத்தில் களமிறங்கிய ஜெய்!

By

Published : Dec 12, 2021, 7:14 AM IST

மூன்று வருடங்களுக்கு பிறகு நடிகர் ஜெய், சென்னையில் மூன்று நாட்களாக நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/11-December-2021/13880589_jaiiii.jpeg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/11-December-2021/13880589_jaiiii.jpeg

நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இதற்காக இவர் கார் சேகரிப்பில் கூட அவ்வப்போது ஈடுபடுவார்.

வெகுநாட்களாக எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அதன்படி, எம்ஆர்எஃப் (MRF) மற்றும் ஜேஏ (JA) மோட்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்தும், ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த பந்தயமானது மூன்று நாட்கள் போட்டியாக (டிச.10 - டிச.12) நடைபெறுகிறது.

கார் பந்தய வீரர் கெட்டப்பில் ஜெய்

இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண் 6 ஆகும். வழக்கமாக அவருக்கு வருண் மணியனின் ரேடியன்ஸ் ரியாலிட்டி (Radiance Reality) நிறுவனமே ஸ்பான்சர் செய்யும் நிலையில், இம்முறை 'எண்ணித்துணிக' திரைப்பட குழுவினர் ஸ்பான்சர் செய்துள்ளனர். இதனால் நடிகர் ஜெய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:பிபின் ராவத் சர்ச்சை: இந்து மதம் மாறும் இஸ்லாமிய இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details