தமிழ்நாடு

tamil nadu

'அண்ணாத்த' படத்தில் இணைந்த ஜெகதிபாபு!

By

Published : Mar 16, 2021, 7:10 PM IST

சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடிகர் ஜெகதிபாபு இணைந்துள்ளார்.

annaatthe
annaatthe

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசை அமைக்கிறார். கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி, அரசியல் பிரவேசம் உள்ளிட்டவைகளால் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டது.

பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனா ரஜினி தனது வீட்டில் ஒய்வெடுத்துவந்தார். இந்நிலையில், 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இதனையடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் இன்று (மார்ச் 16) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் ரஜினி சில தினங்களில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் ஜெகதிபாபு தற்போது இணைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details