தமிழ்நாடு

tamil nadu

’நானே வருவேன்’ - தனுஷின் அட்டகாசமான புது லுக்!

By

Published : Mar 26, 2022, 6:41 AM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

’நானே வருவேன்’ - தனுஷின் அட்டகாசமான புது லுக்!
’நானே வருவேன்’ - தனுஷின் அட்டகாசமான புது லுக்!

"நானே வருவேன்" - தனுஷின் அட்டகாசமான புது லுக்! "நானே வருவேன்" திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அட்டகாசமான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான, "காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை", "மயக்கம் என்ன" உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், ரசிகர்களிடையே நல்ல வரேற்பையும் பெற்றன.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் "நானே வருவேன்" என்ற படத்தில் செல்வராகவன் - தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கரோனா காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஸ்டைலாக அமர்ந்து புகைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் குதூகலமாகி, அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியானது வலிமை!

ABOUT THE AUTHOR

...view details