தமிழ்நாடு

tamil nadu

குஷ்புவை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் முடக்கம்

By

Published : Jul 26, 2021, 2:00 PM IST

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

aadhi
aadhi

சென்னை:சுயாதீன இசை கலைஞரான ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சியின் 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசை அமைத்த ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தை இயக்கியதோடு ஹீரோவாகவும் நடித்தார்.

அதனை தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது யூடியூப் சேனலை அடையாளம் தெரியாத நபர்கள் முடக்கியுள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கம்

மேலும், யூடியூப் சேனலில் அவர் பதிவேற்றம் செய்திருந்த பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன. யூடியூப் சேனலை முடக்கியது யார், முடக்கியதற்கான காரணம் என்வென்று தெரியவில்லை. அண்மையில், நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டருக்கு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details