தமிழ்நாடு

tamil nadu

'ஆதிபுருஷ்' படத்திலிருந்து சைஃப் அலிகானை நீக்க கோரிக்கை!

By

Published : Sep 4, 2020, 3:57 PM IST

மும்பை: பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள 'ஆதிபுருஷ்' படத்திலிருந்து சைஃப் அலிகானை நீக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷண் குமார், 'தன்ஹாஜி - தி அன்சங் வாரியர்' பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ், பிரபாஸ் ஆகியோர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 3டி படம் 'ஆதிபுருஷ்'.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.
அற்புதமான ஆக்‌ஷன் செட்களும், கிராஃபிக்ஸ், நிறைந்த இந்த படத்தில் 'பாகுபலி' மெகா வெற்றிக்குப் பிறகு காவிய கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கத் தயாராகி வருகிறார்.
இப்படத்தில் ராவணனாக 'லங்கேஷ்' கதாபாத்திரத்தில் நடிகர் சைஃப் அலிகான் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
படக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சைஃப் அலிகான் இப்படத்தில் நடிக்க கூடாது என்றும் அவருக்கு பதிலாக ராணாவில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் மீறி சைஃப் அலிகானை வைத்து படம் இயக்கினால் 'சடக் 2' நிலைமைதான் இப்படத்திற்கும் ஏற்படுமென நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details