தமிழ்நாடு

tamil nadu

'ஒரு சார்ஜில் 482 கிமீ பயணம்: அதிரவைக்கும் பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் கார்!

By

Published : Mar 19, 2021, 4:50 PM IST

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான பிஎம்டபிள்யூ ஐ4 எலக்ட்ரிக் காரின் டிசைன் வெளியாகியுள்ளது.

BMW
பிஎம்டபிள்யூ

உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிதாக பிஎம்டபிள்யூ ஐ4 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் செடான் ரக மின்சார வாகனம் ஆகும். இந்தக் காரின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரும் வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாகனத்தின் வடிவமைப்பு, வாகன பிரியர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது.

இந்தக் கார் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 482 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தக் கார் வெறும் நான்கு நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை அடைந்துவிடுகிறது. பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார கார் மூன்றுவித மாடல்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இடிரைவ் 35, இடிரைவ்40, எம்50 ஆகிய மூன்று தேர்வுகளில் கார் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ4 எலக்ட்ரிக் கார்

மேலும், இதில் 530 ஹெச்.பி. திறனை வெளியேற்றக்கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஐடிரைவ் 8 தொழில்நுட்பம், 14.9 இன்ச் டிஸ்பிளே, 12.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாகனத்தின் முழுத் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்த தகவலின்படி, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 25 எலக்ட்ரிக் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:இங்கெல்லாம் டிரைவ் பண்ண ஆசைப்படாதீங்க!

ABOUT THE AUTHOR

...view details