தமிழ்நாடு

tamil nadu

2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

By

Published : Oct 6, 2021, 3:24 PM IST

Updated : Oct 6, 2021, 3:41 PM IST

2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 Nobel prize
2021 Nobel prize

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'Asymmetric Organocatalysis'(மூலக்கூறு கட்டுமானம்) என்ற பிரிவில் இவர்களின் சிறந்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது குறித்து நோபல் குழு, "மூலக்கூறுகளை உருவாக்குவது என்பது கடினமான கலை. பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோர் மூலக்கூறு கட்டமைப்பிற்கு சரியான புதிய கருவியை உருவாக்கியுள்ளார்கள். இது மருத்துவ ஆராய்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வேதியியலின் வளர்ச்சிக்கு உதவும்" என்று கூறியுள்ளது.

2020ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இமானுவேல் ஷார்பான்தியே (பிரான்ஸ்), ஜெனிபர் ஏ. டோட்னா (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகள்

2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளை(அக்.7) அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3.3 லட்சம் சிறார்கள் - பிரான்சில் விபரீதம்

Last Updated : Oct 6, 2021, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details