தமிழ்நாடு

tamil nadu

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை!

By

Published : Sep 19, 2020, 7:39 PM IST

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

salem lady suicide video viral
salem lady suicide video viral

சேலம்: அடுக்குமாடி குடியிருப்பு மேல் தளத்திலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம், ராமகிருஷ்ணா சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி வித்தேஸ்வரி (40). இன்று (செப்.19) காலை நான்கு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சினேகா மறுவாழ்வு மையம்

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தற்கொலை செய்துகொண்ட வித்தேஸ்வரிக்கும், சண்முக சுந்தரத்திற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வித்தேஸ்வரி அவ்வப்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகி வந்ததாகக்கூறப்படுகிறது. இதற்காக தொடர் சிகிச்சையும் பெற்று வந்த வித்தேஸ்வரி தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி பதிவு

வித்தேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட காட்சி அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தின் பரபரப்பான ராமகிருஷ்ணா சாலையில் இன்று (செப். 19) காலை 6 மணிக்கு, பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details