தமிழ்நாடு

tamil nadu

மாயமான ரவுடி சடலமாக மீட்பு: நண்பர்களுக்கு வலைவீச்சு!

By

Published : Dec 12, 2020, 9:56 PM IST

அம்பத்தூரில் மாயமான ரவுடி சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லை கட்டி குளத்தில் வீசப்பட்ட உடலை காவல் துறையினர் மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலைக்கு காரணமான நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

missing rowdy found dead in chennai
missing rowdy found dead in chennai

சென்னை: அம்பத்தூரில் மாயமான ரவுடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அம்பத்தூரை அடுத்த மங்களபுரம், குள்ளன் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி சதீஷ் (29). இவர் டிசம்பர் 10ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இதனையடுத்து, அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்த போதிலும் அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. இது குறித்து சதீஷின் தாய் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் டிசம்பர் 11ஆம் தேதி (நேற்று) புகார் செய்தார்.

காவல் ஆய்வாளர் பரணிதரன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், ரவுடி சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐ.டி.ஐ பின்புறம் மது அருந்தினார். அந்த இடத்தில் ரத்தக்கறை இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனால் அங்கு அவர்களுக்கு இடையே தகராறு நடந்து சதீஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இச்சூழலில், சதீஷ் உடலை அப்பகுதி முழுவதும் காவலர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில், நேற்று (டிசம்பர் 12) மாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் அதே பகுதியில் உள்ள குளத்தில் சோதனையிட்டனர். தொடர்ந்து நடந்த தேடுதல் பணியில், குளத்தில் இருந்து சதீஷ் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

அப்போது, சதீஷின் உடலில் பல இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. மேலும், அவரது கழுத்து பேண்ட் மூலம் இறுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், சதீஷ் மது அருந்திய போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகக் கொலை நடந்ததா? என காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details