தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தல்: ஒருவர் கைது

By

Published : Dec 18, 2019, 3:46 PM IST

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை செஞ்சி காவல் துறையினர் கைது செய்தனர்.

Smuggling of liquor
Smuggling of liquor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மதுவிலக்கு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையிலான காவல் துறையினர், வளத்தி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் எந்த விதமான உரிமமோ, அனுமதியோ இன்றி 21 பெட்டிகளில் 1,008 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட வி.மருதூரைச் சேர்ந்த வீரசெழியன் என்பவரை கைது செய்தனர்.

Smuggling of liquor

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1.6 கிலோ தங்கம் கடத்தல் - நால்வர் கைது

Intro:விழுப்புரம்: செஞ்சி அருகே அந்நிய மாநில மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மதுவிலக்கு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையிலான போலீஸார் இன்று வளத்தி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக அதிவேகமாக வந்த
TN 20 X 1260 பதிவு எண் கொண்ட TATA Indigo (Silvar Colour) நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அதில் எவ்வித உரிமமோ, அனுமதியோ இன்றி 21 பெட்டிகளில் 1008 அந்நிய (பாண்டிச்சேரி) மாநில மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

Conclusion:இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் வீரசெழியன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(இந்த செய்திக்கான புகைப்படம் ஈடிவி தமிழ் டெஸ்க் வாட்ஸ் ஆப்பில் உள்ளது)

ABOUT THE AUTHOR

...view details