தமிழ்நாடு

tamil nadu

பூந்தமல்லியில் வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி!

By

Published : Jan 21, 2021, 1:32 AM IST

பூந்தமல்லியில் வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Job racket Chennai software engineer arrest Chennai latest crime news பூந்தமல்லியில் வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி மோசடி சென்னை செய்திகள்
Job racket Chennai software engineer arrest Chennai latest crime news பூந்தமல்லியில் வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி வேலை வாங்கி தருவதாக 24 லட்சம் மோசடி மோசடி சென்னை செய்திகள்

சென்னை: பூந்தமல்லி, ராஜா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மேரிலதா (41). இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் “தனது மகனுக்கு வேலை மற்றும் கடன் பெற்று தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.24 லட்சம் பணம் பெற்று இதுவரை வேலை வாங்கித் தரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் அமலா ரத்தினம், உதவி ஆய்வாளர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்தக் குற்றங்களில், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (35) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மென்பொறியாளரான சந்தோஷ் குமார், தனது செல்போன் நம்பரை ஆன்லைனில் பதிவு செய்து வேலை வாங்கித் தருவதாக பதிவிட்டுள்ளார். இதனை நம்பி மேரி லதா பேசி ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளார். அதன் பின்பு சந்தோஷ் இறந்துவிட்டதாக கூறி அவரது நண்பர் கார்த்திக் பேசுவது போன்று பேசி மேலும் பணத்தை கரந்துள்ளார்.

மென்பொறியாளரான சந்தோஷ் குமார் தனக்கு வரும் சம்பள பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இவர் பணத்தேவைக்காக வீடுகளுக்கு அதிகாலையில் பால் பாக்கெட் போடுவது, பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போன்ற வேலைகளையும் செய்துள்ளார். அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அந்த வகையில் இதுவரை 35 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தற்கொலைகளைத் தடுக்கவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை:அரசு பதில் மனு

ABOUT THE AUTHOR

...view details