தமிழ்நாடு

tamil nadu

சூறைக்காற்றால் தடுமாறி விழுந்த மீன் வியாபாரி; சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

By

Published : May 19, 2020, 11:14 PM IST

தென்காசி: ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சூறைக்காற்றில் நிலைதடுமாறி கிழே விழுந்த மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்து
சாலை விபத்து

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் நாராயணன் (வயது 35). இவர் குளங்களில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இன்று மாறாந்தை குளத்தில் தனது வேலையை முடித்துவிட்டு கரிசல்குளம், வாகைகுளம் ஆகிய ஊர்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் தென்காசி-நெல்லை மெயின் ரோட்டில் சென்றுள்ளார்.

அப்போது ஆலங்குளம் அருகே புதூர் முதியோர் இல்லம் அருகில் சென்றபோது பலத்த காற்று வீசியதில், அவர் நிலை தடுமாறி சாலையோரம் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவறிந்த சீதபற்பநல்லூர் எஸ்ஐ அந்தோணிராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பின்னர், இறந்த நாராயணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details