தமிழ்நாடு

tamil nadu

சினிமா பாணியில் குடியிருப்புவாசிகளை மிரட்டும் தம்பதி

By

Published : Sep 11, 2020, 12:26 PM IST

சென்னை: சினிமா பாணியில் குடியிருப்புவாசிகளை துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டி வந்த தம்பதியினர் மீது குடியிருப்புவாசி ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

police
police

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (45), என்பவர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

ராஷி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி நோபல் மங்கள்குமார் - மெர்லின். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர்களிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக பார்க்கிங் வசதி, பராமரிப்புப் போன்ற பணிகளில் தாங்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என குடியிருப்புவாசிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியிருப்புவாசிகள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் தன்னிடம் துப்பாக்கி உள்ளதாகவும்; அதனை வைத்துச் சுட்டு விடுவதாகவும் தொடர்ந்து மங்கள்குமார் மிரட்டுவதாக முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' - மாநகரப் பேருந்துகளில் ஜெ., வாசகம்

ABOUT THE AUTHOR

...view details