தமிழ்நாடு

tamil nadu

சொத்து பிரச்னை: காதல் தம்பதி விஷமருந்தி தற்கொலை

By

Published : Feb 10, 2021, 8:05 PM IST

சேலம்: ஆத்தூர் அருகே சொத்து பிரச்னையில் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

suicide
suicide

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளி, அவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அபிநயா(12), என்ற மகளும், சங்கீத் (11) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நால்வரும் வேல்முருகனின் தந்தைக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

வேல்முருகன் காதல் திருமணம் செய்துகொண்டதால் சத்யாவிற்கும் அவரது மாமியார் தனலட்சுமிக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று நேற்றிரவு (பிப்.9) இருவருக்கம் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. அப்போது, தனலட்சுமிக்கு ஆதரவாக, கணவரின் தம்பி மனைவி ராஜாமணியும் சேர்ந்துகொண்டு சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து வேலை வீட்டு வீடு திரும்பிய வேல்முருகனிடம் சத்யா நடந்ததை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். நேற்றிரவு (பிப்.9) மஞ்சினி அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றவர்கள், இருவரும் விஷம் குடித்துவிட்டு தங்களது குழந்தைகளுக்கும் வாயில் ஊற்றியுள்ளனர்.

விஷம் அருந்திய வேல்முருகன், சத்யா பரிதாபமாக உயிரிழந்தனர். குறைவாக விஷம் குடித்த குழந்தைகள் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் உடனடியாக ஆத்தூர் ஊரக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பெண் குழந்தை அபிநயா, ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், சங்கீத் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை தற்கொலை செய்துகொண்ட தம்பதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தலைமை காவலர் அடித்துக்கொலை- எஸ்ஐ துப்பாக்கி மாயம்.. கள்ளச் சாராய கும்பல் வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details