தமிழ்நாடு

tamil nadu

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

By

Published : Nov 5, 2020, 11:14 AM IST

கோவையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

suicide
suicide

கோயம்புத்தூர் : கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த மருதமலை அமர் ஜோதி காலனியைச் சேர்ந்தவர் சிவமுருகன். அவரது மனைவி வைர ராணி. இவர்களுக்கு, யுவஸ்ரீ, ஹேமா என இரு மகள்கள் உள்ளனர். பால் வியாபாரம் செய்து வந்த சிவமுருகன், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் கடையில் கூலி வேலை செய்து வந்தார். கடன் தொல்லையாலும், தனக்கு பணம் தரவேண்டியவர்கள் பணத்தைத் திருப்பித் தராததாலும் சிவமுருகன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த சிவமுருகன், இன்று அதிகாலையில், பழத்தில் விஷம் தடவி மனைவி, மகள்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார்.

இதில் சிவமுருகன், ராணி, யுவஸ்ரீ ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், சிறுமி ஹேமாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :வேலைவாய்ப்பு அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details