தமிழ்நாடு

tamil nadu

கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்த பெண்; கொடூர கொலை செய்த தந்தை

By

Published : Jun 1, 2022, 1:49 PM IST

தெலங்கானாவில் , கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்த பெண்னை , தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

daughter mother killed
தாய் மகள் கொலை

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம், ஜெயின்லிபூர் கிராமத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணய்யா- கலாம்மா தம்பதியின் மகளான சரஸ்வதிக்கு கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 25ஆம் தேதி சரஸ்வதி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நாள்கள் கழித்து சரஸ்வதி கணவர் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணய்யா மகள் சரஸ்வதியையும், மனைவி கலாம்மாவையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

செல்லும் வழியிலேயே தாயும் மகளும் இறந்து விட்டனர். தற்போது கிருஷ்ணய்யாவுக்கு மகபூப்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறில் தாய், மகன் கடப்பாரையால் குத்திக்கொலை; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details