தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்கா ராணுவத்தின் உளவு விமானம் விபத்து! 9 பேர் நிலை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 4:19 PM IST

ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற அமெரிக்க கடற்படை விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

Plane
Plane

ஹொனலுலு : ஹாவாய் தீவின் கேனோஹே பே பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கடற்படை தளம் உள்ளது. இந்த ராணுவ தளத்தில் P-8A aircraft உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கேனோஹே கடற்படை தளத்தில் P-8A aircraft என்ற விமானம் உளவு மற்றும் ரகசிய தகவல்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

உளவு பார்ப்பது தவிர்த்து P-8A aircraft விமானத்தை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சாதனங்களை வேட்டையாடுவதற்காகவும் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 9 பயணிகளுடன் பறந்து கொண்டு இருந்த விமானம் தரையிறங்க முயற்சித்த போது, கடற்படை தளத்தின் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தின் முன்பாகம் இரண்டாக உடைந்து சேதமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிர்பிழைத்ததாகவும், பெரியளவிலான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், யாரார் பயணித்தனர், அவர்கள் தொடர்புடைய தகவல்களை அமெரிக்க கடற்படை வெளியிடவில்லை. விபத்தில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்கின்றனரா என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீர் மூன்றாவது முறையாக வெற்றிகரமாக வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details