தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவுக்கு யுனிசெஃப் வாழ்த்து!

By

Published : Jul 19, 2022, 11:38 AM IST

இந்தியாவில் 200 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு யுனிசெஃப் வாழ்த்து தெரிவித்துள்ளது.

யசுமாசா கிமுரா, Yasumasa Kimura
யசுமாசா கிமுரா

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் (ஜூலை 17) 200 கோடியை கடந்தது. இந்தியாவின் இந்த சாதனைக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் இந்தியாவின் பிரதிநிதியான யசுமாசா கிமுரா கூறுகையில், "இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், 18 மாதங்களில் 200 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்த்த சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கான வெற்றி.

அவர்கள் கரோனா பரவல், மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இதை சாத்தியமாக்கியுள்ளனர். தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கடின உழைப்பை கௌரவிக்கும் தருணம் இது" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:200 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன - மத்திய சுகாதாரத்துறை!

ABOUT THE AUTHOR

...view details