தமிழ்நாடு

tamil nadu

போதையால் மாறிய பாதை.. கோடீஸ்வரன் டூ பிச்சைக்காரன்!

By

Published : Dec 3, 2022, 12:05 PM IST

லண்டனில் கோடீஸ்வரனாக இருக்கும் டோம், போதை பழக்கத்தால் தெருவில் படுத்து தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

போதையால் மாறிய பாதை.. கோடீஸ்வரன் டூ பிச்சைக்காரன்!
போதையால் மாறிய பாதை.. கோடீஸ்வரன் டூ பிச்சைக்காரன்!

லண்டன்: லண்டனின் தெருக்களில் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு, தெருவின் ஓரங்களில் கிடைக்கும் இடங்களில் படுத்து தூங்குவார். ஆனால் அவரது மாத வருமானம் மட்டும் ரூ.1.27 லட்சம் என்று கூறினால், யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

லண்டனில் வசித்து வந்த டோம், சிறுவயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டார். பின்னர் தடகளத்தில் ஆர்வமாக இருந்த டோம், அதில் கிடைக்கும் உதவித்தொகையை வைத்து போதைக்கு அடிமையானார். இது அவருடைய 13வது வயதில் புகைப்பிடித்தல் மற்றும் மதுவுக்கும் அடிமையாக மாற்றியது. அடுத்ததாக 17வது வயதில் ஹெராயின் போதைப்பொருளுக்கும் டோம் அடிமையானார்.

இதனை கவனித்த பெற்றோர், அவருக்கு வீடு கட்டி கொடுத்தனர். இருப்பினும் அதில் வரும் வருமானத்தை வைத்து மேலும் மேலும் போதைக்கு அடிமையானார் டோம். இதனிடையே டோமுக்கு திருமணமும் நடைபெற்றது. இருந்தாலும் டோமால் போதை பழக்கத்தை கைவிட முடியவில்லை.

தற்போது டோமை அவரது பெற்றோர் மற்றும் மனைவி கவனிப்பதில்லை. எனவே அவர் வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில் அவரது வீட்டு மதிப்பு மட்டும் ரூ.5 கோடி ஆகும். இருப்பினும் போதைக்கு அடிமையானதால் டோமின் பாதை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் மாறியுள்ளது.

இதையும் படிங்க:மதுபோதையில் அரசுப் பள்ளியை சேதப்படுத்திய 5 இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details