தமிழ்நாடு

tamil nadu

ஆப்கன் சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் வெடிகுண்டு தாக்குதல்!

By

Published : Jun 18, 2022, 11:05 AM IST

Updated : Jun 18, 2022, 1:40 PM IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இன்று (ஜூன் 18) காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆப்கன் சீக்கிய வழிப்பாட்டுத் தலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்
ஆப்கன் சீக்கிய வழிப்பாட்டுத் தலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்

காபுல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இன்று (ஜூன் 18) காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக குருத்வாராவிற்கு அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வரும் நிலையில், பாஜக நிர்வாகி மஜிந்தர் சிங் சிர்ஸா சம்பவம் தொடர்பான சில காணொலிகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தாக்குதல் சம்பவத்தில், சவிந்தர் சிங் என்பவர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பக்சி,"காபுலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடந்ததாக வரும் தகவல்கள் மிகவும் கவலை அளிக்கிறது; அங்கு நிலவும் சூழலை கண்காணித்து வருகிறோம்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான குருத்வாராவின் தலைவர் தன்னிடம் கண்ணீருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், குருத்வாராவில் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் இந்திய உலக மன்றத்தைச் சேர்ந்த புனித் சிங் சந்தோக் கூறியுள்ளார்.

மேலும், தாக்குதலை நடத்தியவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், 3 ஆப்கன் ராணுவ வீரர்களும் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காக வருந்துகிறோம் - பிரிட்டிஷ் அதிகாரி வருத்தம்

Last Updated : Jun 18, 2022, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details