தமிழ்நாடு

tamil nadu

தென்மேற்கு பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு...

By

Published : Sep 11, 2022, 8:33 AM IST

தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவாகியுள்ளது.

earthquake  Papua New Guinea  earthquake detected in Papua New Guinea  பயங்கர நிலநடுக்கம்  பப்புவா நியூ கினியா  பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்  நிலநடுக்கம்
நிலநடுக்கம்

போர்ட் மோர்ஸ்பி: தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (செப் 11) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம், இந்த நிலநடுக்கம் நியூ கினியாவின் கைனண்டு நகரத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. சுனாமி உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பப்புவா நியூ கினியாவிற்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இருப்பினும் பாதிப்புகள் குறித்து முழு தகவல் கிடைக்கவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியூ கினியாவில் 1900-க்கு பின்னர் 7.5-க்கு அதிகமாக ரிக்டர் அளவில் இதுவரை 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8.6ஆக ரிக்டர் அளவு, 1996ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ABOUT THE AUTHOR

...view details