தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.! ஒருவர் பலி

By

Published : Feb 6, 2023, 7:35 AM IST

பால்கன் நகரில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பால்கன் பகுதியில் நேற்று(பிப்.5) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து நள்ளிரவு 12.50 மணியளவில் எல் பாசோ நகர காவல் கட்டுப்பாடு அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அங்கு படுகாயங்களுடன் இருந்த ஐந்து பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் தீவிரமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாயிண்ட் ரெயீஸ் டிரைவ் பகுதியில் தொடர் துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது அறியப்படவில்லை. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் தேதி பாட்டர் டிரைவ் பகுதியில் நடந்த கார் கடத்தலுக்கும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்காது என நம்புவதாக” கூறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர்களுடன் கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையும் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: டிஎம்சி தொண்டர்கள் இருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் - எஸ்.பி. இடமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details