தமிழ்நாடு

tamil nadu

உலக தடகள சாம்பியன்ஷிப்.. இறுதி சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேற்றம்.. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 10:17 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டிக்கு முன்னேறியதை அடுத்து அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிற்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

Neeraj chopra
நீரஜ் சோப்ரா

புடாபெஸ்ட்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதிச் சுற்று நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது. இந்த தகுதி சுற்றில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த தகுதி சுற்றில் 83 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினால் இறுதி போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியும்.

இந்நிலையில், இந்தியா வீரரான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88 புள்ளி 77 மீட்டர் ஈட்டியை வீசி அசத்தினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நீரஜ் சோப்ரா நேரடியாக தகுதி பெற்றார். மேலும், மிகவும் நீண்ட தூரம் வீசியதால் அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார்.

இதையும் படிங்க:ஒருநாள் உலக கோப்பை பயிற்சி அட்டவணை வெளியீடு! இங்கிலாந்து, நெதர்லாந்தை சந்திக்கிறது இந்தியா..!

ஈட்டி எறிதலில் பங்கேற்ற மற்றொரு இந்தியா வீரரான டி. பி மனுவும் 81 புள்ளி 31 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து குரூப் ஏ பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து உள்ளார் . மேலும், மற்றொரு இந்தியா வீரர் கிசோர் ஜென குரூப் பி-யில் நிலைபெற்றுள்ளார். குரூப் ஏ மற்றும் பி பிரிவில் 83 ஈட்டி ஏறிதல் மூலமோ அல்லாது முதல் 12 இடங்களை பிடிப்போருக்கு இறுதி சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். இறுதி சுற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறுகிறது.

ஒலிம்பிக்ஸ் (2021), ஆசிய விளையாட்டு போட்டிகள் (2018), காமன்வெல்த் (2018) ஆகியவற்றில் தங்கமும், டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை தங்கம் மட்டும் கைப்பற்றியது இல்லை. அதை இந்த முறை தகர்த்து எறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் அவர் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐசிசி உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details