தமிழ்நாடு

tamil nadu

ஃபேஸ்புக் CEO மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு விலகல்? - மெட்டா விளக்கம்

By

Published : Nov 23, 2022, 4:30 PM IST

ஃபேஸ்புக் CEO மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு விலகுவதாக வெளியான தகவலை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது.

ஃபேஸ்புக் CEO மார்க் சக்கர்பெர்க் அடுத்த ஆண்டு விலகல்?- மெட்டா விளக்கம்
ஃபேஸ்புக் CEO மார்க் சக்கர்பெர்க் அடுத்த ஆண்டு விலகல்?- மெட்டா விளக்கம்

சான்பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): கடந்த சில நாட்களாக அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்ற நிலையில் மெட்டாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு ராஜினாமா செய்வதாக வெளியான செய்திகளை மெட்டா மறுத்துள்ளது.

மார்க் ஸுக்கர்பெர்க், தன்னைப் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், இது அவரது பல பில்லியன் டாலர் திட்டமான மெட்டாவெர்ஸை பாதிக்காது என்றும் சில கருத்துகள் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மெட்டாவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஆண்டி ஸ்டோன் இதனை மறுத்து, "இது தவறானது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், ஸுக்கர்பெர்க் தனது மெட்டாவெர்ஸ் கனவை நனவாக்குவதில் உறுதியாக உள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், தொழில் நுட்பத்துறையில் இதுவரை இல்லாத வகையில் ஸுக்கர்பெர்க் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை, உலகளவில் சுமார் 13 விழுக்காட்டினரை பணிநீக்கம் செய்தார். இதுமட்டுமின்றி 2023 வரை பணியமர்த்தல் முடக்கத்தை நீட்டித்தார்.

இதனால் முதலீட்டாளர்கள் நஷ்டம் தரக்கூடிய, பில்லியன் டாலர் மெட்டாவெர்ஸ் கனவில் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய கூட்டாண்மையின் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது

ABOUT THE AUTHOR

...view details