தமிழ்நாடு

tamil nadu

நெதர்லாந்துடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

By

Published : Apr 7, 2022, 11:12 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக நெதர்லாந்து நாட்டுக்கு ஏப்.4ஆம் தேதி சென்றார். அவர் தனது பயணத்தை இன்று முடித்துக்கொண்டு டெல்லி திரும்புகிறார்.

Ram Nath Kovin
Ram Nath Kovin

புது டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் ஆகியோர் நீர், விவசாயம், சுகாதாரம், காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி, மக்கள் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக நெதர்லாந்து நாட்டுக்கு ஜன.4ஆம் தேதி அரசு முறைப் பயணமாக சென்றார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (ஏப்.7) டெல்லி திரும்புகிறார்.

நெதர்லாந்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் உள்ள ராயல் பேலஸில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் முழு அரசு மரியாதையுடன் வரவேற்றனர்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஏப்ரல் 6 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்தார். அதே நாளில், நெதர்லாந்து நாடாளுமன்றத்திற்குச் சென்ற ராம்நாத் கோவிந்த்-ஐ, செனட்டின் தலைவர் ஜான் அந்தோனி புரூய்ன் மற்றும் பிரதிநிதிகள் சபையின் தலைவர் வேரா பெர்க்காம்ப் ஆகியோர் வரவேற்றனர்.

வில்லெம்-அலெக்சாண்டருடனான இந்தச் சந்திப்பில், இரண்டு ஜனநாயக நாடுகள், முக்கிய பொருளாதாரங்கள், புதுமை மற்றும் தொழில்நுட்பம், கூட்டாண்மை குறித்து பேசினார்கள்.

இதையும் படிங்க :வங்கதேசம் சென்ற ராம்நாத் கோவிந்த்

ABOUT THE AUTHOR

...view details