தமிழ்நாடு

tamil nadu

நபிகள் நாயகம் விவகாரம்... நாடு கடத்தும் குவைத் அரசு...

By

Published : Jun 13, 2022, 3:53 PM IST

நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்த ஊருக்கு அனுப்பி வருகிறது.

kuwait-to-deport-expats-who-protested-against-remarks-on-prophet
kuwait-to-deport-expats-who-protested-against-remarks-on-prophet

குவைத் சிட்டி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பின. இந்த சம்மனுக்கு இந்திய தூதரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் நூபர் சர்மாவை கைது செய்யக்கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் வளைகுடா நாடுகளில் சில இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே குவைத் அரசு, நபிகள் நாயகம் விவகாரம் தொடர்பாக குவைத் நாட்டில் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால், ஃபஹாஹீல் பகுதியில் ஜூன் 10ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் குவைத் அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டது. அந்த வகையில் 20-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குவைத் விதிகளின்படி தொழில், படிப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக அந்நாட்டுக்கு வருவோர் போராட்டம் நடத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உ.பி. வன்முறையில் ஈடுபட்டவர் வீட்டில் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details