தமிழ்நாடு

tamil nadu

ஃபக்ரிசாதே படுகொலை : ஈரானின் குற்றச்சாட்டை மறுத்த சவுதி அரேபியா!

By

Published : Dec 2, 2020, 7:00 PM IST

ரியாத்: அணு அறிவியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலையில் சவுதி அரசின் பங்கு இருப்பதாக கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சரின் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்துள்ளது.

Saudi Arabia denies role in assassination of Iranian nuke scientist
ஃபக்ரிசாதே படுகொலை : ஈரானின் குற்றச்சாட்டை மறுத்து சவூதி அரேபியா!

ஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் (ஐ.ஆர்.ஜி.சி) பிரிகேடியர் ஜெனரலாகவும், அணு அறிவியலாளராகவும் இருந்தவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே. ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களுக்கு தலைமைத் தாங்கி செயல்படுத்தி வந்த இவர் கடந்த 27 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கூட்டுச் சதி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் குற்றம்சாட்டியுள்ளார். ஈரானின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல்-ஜுபைர், “படுகொலைகளில் ஈடுபடுவது சவுதி அரேபியாவின் கொள்கை அல்ல” என கூறியுள்ளார்.

ஃபக்ரிசாதே படுகொலை : ஈரானின் குற்றச்சாட்டை மறுத்து சவுதி அரேபியா!

ஈரான் அணு அறிவியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை தொடர்பில் இஸ்ரேல், அமெரிக்க அரசுகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஐநாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து அறிமுகம்செய்யும் ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details