தமிழ்நாடு

tamil nadu

பிரிக்ஸிட்: நீடிக்கும் குழப்பம்!

By

Published : Feb 15, 2019, 1:28 PM IST

லண்டன்: பிரிட்டன் பிரதமரின் புதிய பிரிக்ஸிட் உடன்படிக்கைக்கான வாக்கெடுப்பு நேற்று தோல்வியில் முடிவடைந்தது. இதனால் பிரிக்ஸிட் உடன்படிக்கையில் குழப்பம் நீடிக்கிறது.

பிரிக்ஸிட்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் உடன்படிக்கையான பிரிக்ஸிட் உடன்படிக்கை சுமுகமாக நடைபெற எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலை கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருகிறது.


பிரிட்டனின் எம்.பி.க்கள் பிரிக்ஸிட்டுக்கு ஆதரவளித்தபோதிலும் தற்போது இருக்கும் உடன்படிக்கையில் நிறைய சட்டத்திருத்தங்கள் தேவை என கருதுகின்றனர். வடக்கு அயர்லாந்து எல்லைகளிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஜனவரி 29-ம் தேதி நடத்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த உடன்படிக்கையில் சட்டத்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பில் தெரெசா மே மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதையடுத்து தெரெசா மே புரூசேல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏற்கனவே செய்த உடன்படிக்கையில் மாற்றம் செய்ய பேச்சு வார்தை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செய்த உடன்படிக்கையில் மாற்றம் செய்ய தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரிக்ஸிட் விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

http://www.eenaduindia.com/news/international-news/2019/02/15085349/US-House-of-Reps-passes-border-security-bill.vpf


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details