தமிழ்நாடு

tamil nadu

’காபூல் விமான நிலையத்திற்கு செல்லாதீர்கள்’ - பிரிட்டன் எச்சரிக்கை

By

Published : Aug 26, 2021, 12:45 PM IST

ஆப்கனில் அசாதாரண சூழல் நிலவுவதால் காபூல் விமான நிலையத்திற்கு பிரிட்டன்வாசிகள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையம்

ஆப்கனிஸ்தானில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "ஆப்கனில் பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமாக உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே காபூலின் ’ஹமித் கர்சாய்’ சர்வதேச விமான நிலையத்திற்கு யாரும் செல்லாதீர்கள்.

விமான நிலையம் அதன் சுற்றுப்பகுதிகளில் வசித்தால், அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கிக் கொள்ளுங்கள். அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளியே வராதீர்கள்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ”வணிகரீதியான விமானப் போக்குவரத்து தற்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற சரியான வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக வெளியேறிவிடுங்கள்" எனவும் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியை தாலிபான்கள் அடைத்துள்ளனர். மேலும், விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் மட்டுமே நாட்டை விட்டு வெளியேறலாம் என தாலிபான் கூறியுள்ளது. இதன் பின்னணியில்தான், தனது குடிமக்களின் பாதுகாப்புக் கருதி பிரிட்டன் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அரசும் தனது குடிமக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வழிகாட்டுதல் இன்றி வர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்கிருக்கும் அமெரிக்கர்களை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் மீட்கவும் அமெரிக்கா தீவிரம்காட்டி வருகிறது.

இதையும் படிங்க:அம்பேத்கரிய எழுத்தாளர் கெயில் ஓம்வெட் மறைவு

ABOUT THE AUTHOR

...view details