தமிழ்நாடு

tamil nadu

ஒமைக்ரானுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 75 விழுக்காடு செயல்திறன்

By

Published : Jan 19, 2022, 2:59 AM IST

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 75 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Russia's Sputnik V
Russia's Sputnik V

மஸ்கோ:உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துவருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே ஒமைக்ரான் தொற்றுக்கு, கரோனா தடுப்பூசியின் செயல்திறன் வீரியமாக இருக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் தொற்றை எதிர்க்கும் செயல்திறன் கொண்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் கமலேயா நிறுவனம் தெரிவிக்கையில், உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் மாறுபாடான ஒமைக்ரான் தொற்றுக்கு புதிய ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசியில் பெரிய மாற்றம் தேவைப்படாது. ஏனெனில் இந்த தடுப்பூசி மாற்றம் செய்யப்படாமலேயே சிறப்பாக செயல்படுகிறது. அதனால் 45 நாள்களில் ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியை மறுசீறமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதனிடேயே நேற்று(ஜன.18) கமலேயா தலைவர் ஜின்ட்ஸ்பர்க் ரோசியா செகோட்னியா கூறுகையில், ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 75 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளது.

அதோபோல மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் டோஸ் செலுத்தினால் ஒமைக்ரான் பாதிப்பு அளவு 100 விழுக்காடில் இருந்து, 56 விழுக்கடாக குறைகிறது. எனவே ஒமைக்ரானுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி போதும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டில் புதிதாக 2.38 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details