தமிழ்நாடு

tamil nadu

இங்கிலாந்தில் இந்திய மருத்துவர் சந்தேகமான முறையில் மரணம்

By

Published : May 30, 2020, 2:27 AM IST

லண்டன்: இங்கிலாந்து விடுதியில் தனிமைப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்திய மருத்துவர் சந்தேகமான முறையில் மரணம்
இங்கிலாந்தில் இந்திய மருத்துவர் சந்தேகமான முறையில் மரணம்

இங்கிலாந்தில் உள்ள வேக்ஸ்ஹம் பார்க் என்னும் மருத்துவனையில் மயக்க மருந்து ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தார், இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா.

இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், ஈடுபட்டு வந்ததால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு குடும்பத்தை விடுத்து, விரக்தியில் தங்கியிருந்தார்.

கடந்த திங்கள்கிழமையன்று (25/5/20) விடுதியில் இறந்துகிடந்துள்ளார். இவர் இறப்பின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து வேக்ஸ்ஹம் பார்க் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா காாலத்தில் அவராற்றிய பணி மகத்தானது. ராஜேஷ் குப்தா இறப்பதற்கு முன்புதான் முக்கியப் பதவியில் பணியமர்த்தப்பட்டார்.

பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதரான ராஜேஷ் குப்தா, பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார். இவரின் மறைவு மருத்துவமனைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா, ஜம்முவில் தன் படிப்பை முடித்தார். இவருக்கு மனைவியுடன் ஒரு மகன் உள்ளனர்.

இதையும் படிங்க: பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கிய டாம் ஹாங்ஸ்

ABOUT THE AUTHOR

...view details