தமிழ்நாடு

tamil nadu

பரிசோதனையில் நல்ல முன்னேற்றத்தை அளித்த கரோனா தடுப்பு மருந்து!

By

Published : Jul 20, 2020, 9:00 PM IST

லண்டன்: லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட சைனர்கன் மருந்து நிறுவனம், சோதனை அடிப்படையில் மேற்கொண்ட கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும், இது நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றத்தை அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

.Coronavirus drug by UK-based company shows 'positive results' in clinical trial
.Coronavirus drug by UK-based company shows 'positive results' in clinical trial

சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் வைரஸால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், பொருளாதார இழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வல்லரசு நாடுகள் பலவும் கரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான சைனர்கன், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரத அடிப்படையிலான சிகிச்சை அளித்ததில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளது. இது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

SNG001 உருவாக்கமானது, மனித உடல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும்போது இன்டர்ஃபெரான் பீட்டா எனப்படும் ஒரு புரதத்தைப் பயன்படுத்துகிறது; இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்ற நம்பிக்கையில், கரோனா வைரஸ் நோயாளிகளிடம் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பரிசோதனை நல்ல முன்னேற்றத்தை கரோனா நோயாளிகளிடம் அளித்துள்ளது. சோதனை முடிவுகளில் கரோனா வைரஸின் முக்கிய அறிகுறியான மூச்சுத் திணறலில் இருந்து நோயாளிகள் விரைவில் குணமடைவது தெரிய வந்துள்ளது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்த நோயாளிகள் இயல்பாக சுவாசித்து வருகின்றனர். இது தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கிறது.

முன்னதாக, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்மா தடுப்பு மருந்தைக் காட்டிலும், இந்த மருந்து பயன்படுத்திய நோயாளிகள் 79 விழுக்காடு நோயின் அதி தீவிர நிலையிலிருந்து விடுபடுகின்றனர்.

இங்கிலாந்திலுள்ள ஒன்பது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 101 தன்னார்வலர்களின் மேல் பரிசோதனை நிகழ்த்தப்பட்டதையடுத்து, இம்முடிவுகள் தெரிய வந்துள்ளன.

.

ABOUT THE AUTHOR

...view details