தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசிகள் டெல்டா வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

By

Published : Aug 19, 2021, 5:31 PM IST

கோவிட்-19 டெல்டா வகை தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பிரிட்டன் நாட்டு ஆய்வு நிறுவனம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

டெல்டா வகை கரோனா பாதிப்பை தடுப்பூசிகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது குறித்து பிரிட்டனில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • பைசர்-பயோஎன்டெக் மற்றும் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராசெனெகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்றிலிருந்து நல்லப் பாதுகாப்பு கிடைக்கிறது.
  • ஏற்கனவே கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
  • தொற்றின் தீவரத்தன்மையை தடுப்பூசிகள் குறைக்கின்றன
  • தடுப்பூசிகளில் மார்டனா நிறுவன தடுப்பூசிகள் டெல்டா வகை பாதிப்பை சிறப்பாக எதிர்கொள்கின்றன. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ராசெனேகா தடுப்பூசியும், பைசர் தடுப்பூசியும் தொற்று பாதிப்புக்கு எதிராக செயல்படுகின்றன.
  • வயதானவர்களைவிட இளையோருக்கு தடுப்பூசி நல்ல பலன்களை அளிக்கிறது.

இதையும் படிங்க:தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு- ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details