தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் 10 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்க ரஷ்யா ஒப்புதல்

By

Published : Nov 27, 2020, 5:19 PM IST

ஸ்புட்னிக் வி (Sputnik V) கோவிட்-19 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Sputnik V vaccine
Sputnik V vaccine

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பரிசோதனைக்கு எதிராக முதல் தடுப்பூசியை ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பதிவு செய்தது. ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் பெயரை இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக் வி(Sputnik V) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த தடுப்பூசி 95 விழுக்காடு பலன்களை தருவதாகக் ரஷ்யாவின் ஆர்.டி.ஐ.எஃப்(RDIF) அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், RDIF அமைப்புடன் இணைந்து இந்தியாவின் ஹிடேரோ நிறுவனம் ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஹிடேரோ நிறுவன இயக்குநர் முரளி கிருஷ்ணா ரெட்டி, "கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய முன்னெடுப்பு. மேக் இன் இந்தியா கனவை நனவாக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் ஸ்புட்னிக் 95 விழுக்காடு பலன் தந்துள்ளது. இதையடுத்து ஓராண்டுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை; கொழும்பு சென்றார் அஜித் தோவல்

ABOUT THE AUTHOR

...view details