தமிழ்நாடு

tamil nadu

2021 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இரு ஊடகவியலாளர்கள்

By

Published : Oct 8, 2021, 2:50 PM IST

Updated : Oct 8, 2021, 3:08 PM IST

பிலிப்பைன்ஸை சேர்ந்த மரியா ரெசா, ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முராட்டோ ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நோபல் பரிசை வென்ற இருவர்
நோபல் பரிசை வென்ற இருவர்

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸை சேர்ந்த மரியா ரெசா, ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முராட்டோ ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஜனநாயகம், அமைதி ஆகியவற்றை காப்பதற்கு அடிப்படை அம்சமாகத் திகழும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட இவர்கள் ஆற்றிய அரும்பணிக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

2020 அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகள்

2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3.3 லட்சம் சிறார்கள் - பிரான்சில் விபரீதம்

Last Updated : Oct 8, 2021, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details